மாறுதல்களும்,.. மாறுபடும் மனநிலையும்!..

 "உள்ளுணர்வுகளும், உடல்நலமும்" என்ற முதல்' தலைப்பின் தொடர்ச்சி,. இதோ...

    

      “தியானம்" என்பது அமர்ந்து, விழிமூடி, ஓர் புள்ளியில் சிந்தனையைக் குவிப்பது மட்டுமல்ல…

       அன்றாட வாழ்வில், நாம் சந்திக்கும் உடன் பயணிக்கும் உறவுகள் முதல் வழிப்போக்கர் வரை,. அனைவரும் ஏதோ ஓர் சூழலுக்குள் தங்களை ஈடுபடுத்தி பலவகையான மனரீதியான உணர்வுகளாலும்,.. தாங்களே அறியாமல் பல்வேறு நிலைகளில் தியானத்தை மேற்கொள்கின்றனர்!.

ஆம்!.. எனது கண்ணோட்டத்தில்,. தியானத்தின் மாறுபட்ட நிலைகள், இதோ...
  1. அர்ப்பணிப்பு
  2. ஆர்வம்
  3. இரக்கம்
  4. ஈடுபாடு
  5. உவகை
  6. ஊக்கம்
  7. எதிர்நீச்சல்
  8. ஏகாந்தம்
  9. ஐயங்கள் போக்குதல்
  10. ஒழுக்கம்
  11. ஓசையின் உயிர்ப்புகள்   

    உணர்தல்

  1. ஔடதம் ஆராய்ந்து ஏற்றல்
  2. அஃகுதல்' வெஃகுதல்

    தவிர்த்தல்!.

இனி,. உணர்வின் வெளிப்பாட்டில் ஆதிக்கம் செலுத்தும்,

மௌனம்' பற்றிய சில துளிகள்:

      மனதின் விசித்திர உலகத்துடன், விளையாடும் விபரீதங்களையும் நிதானித்து நினைந்து,. மன உறுதியுடன் மாறுதல்கள் நமை ஆட்கொள்ள,. நாம் அதனை ரசிக்க…

      மௌனம்' அங்கே அழகாக அபிநயிக்கும்!.

      எதிர்திசையின் ஆதிக்கத்துடன்,. மௌனத்தின்' உணர்வு முடிச்சுகள் அவிழும் போது,. வெளிவராது விம்மித்தவித்த சொற்கள் விடுதலை அடைகின்றன…

     மௌனம்' ஆயுதமாகும் சில இடங்களில்,.. ஆபத்தாகும் சிற்சில இடங்களில்,.. 

     உடைபடும் மௌனம்' இசை போல் சில தருணத்தில்,.. இம்சைகள் போல் சிற்சில தாக்கங்களில்,..

 ஔடதம் – மருந்து!

 அஃகுதல் – மனம் குன்றுதல்..

 வெஃகுதல் – பேராசை..

மாறுதல்கள்:

      வழிமாறுதல்' வேறு

மாற்றுவழி' என்பது வேறு..

      இரண்டிற்குமான வித்தியாசம் அறியாதிருந்தால்,. வினைகள் பல உருமாறும்… விபரீதங்களும் அரங்கேறும்!..

(மனதுடன்)ஈர்ப்புவிசை:

      புரிதலின்றி மாயைகளும் நிகழ்ந்திடும்!.. வார்த்தைகள் கிடைக்காத அந்த' தவிக்கும் மனதுடன் ஏக்கத்தின் தேடல்கள்,.. எங்கே நீ' எங்கே என புலம்பிடும்!

      முட்டிமோதும் வார்த்தைகளை கோர்வைக்குள் கட்டுப்படுத்த இயலாத, உணர்ச்சிப் 

பேரலைக்குள் மூழ்கிப்போகும் அந்த' விசித்திரமான சூழல்!..

தேடல்கள்:

     ஆழ்ந்த நினைவுகள் வேரூன்றும் நேரங்களில்,.. சுவைசேர்த்திடும் ரசனைகளை கையாள,. நெருக்கங்களை விடுத்து சில' தொலைவுகளும் தேவைப்படுகிறது!..

     சில தேடல்களுடன் இடைவெளிகளும் அவசியமே!.

     மனது அசைபோட்டு ரசித்திட சில ஆதங்கங்களும் இருந்துவிட்டுப் போகட்டுமே!..

தாக்கங்கள்:

இடைவிடா ஆதிக்கத்துடன் இறுதிவரைப் போராடத் துடித்திடும் இம்(ச்)சைகளே.. தாக்கங்கள்!.

     எழமுடியாத சூழலிலும், சாதிக்க முனைந்திடும் தன்னம்பிக்கையின் அளவுகோல், துள்ளலுடன் ஆர்ப்பரித்தெழும்

சக்தியைப் பிரசவிப்பதே… எதிர்நீச்சல்!.

     நிறைவு' என எதனையும் முடிவெடுத்திட இயலாது!.

     தொடர்ச்சிகள் நமை தொடர்ந்து கொண்டே…

     ஏதேதோ கதைகளும் உருவாகிக் கொண்டே…

சுவாரஸ்யமான சிந்தனைகள் தொடரும்,.. அதுதான் வாழ்க்கை!

விடைபெறாமல் என்றும் நட்புடன்..

உங்களின் அன்புத்தோழி..

 — ரேவதிபாலு!..

   Moblie   – 7010692480