மனித உணர்வுகளும்., எதிர்பார்ப்புகளும்’ உடல் நலனுடன் பயணித்தே, ஒன்றையொன்று சார்ந்திருப்பதால்,. உடன்படுபவை’ உடன்படாதவை’ என வெவ்வேறு நிலைகளை ஆழ்மனது ஆராய்ந்திட துவங்கிடும்.
மேலோட்டமான சிந்தனைகள்., சற்று கவனங்களை ஈர்த்திட இடைப்பட்ட நிலையுடனே ஏதேதோ கதைபேசும்!
ஈர்க்கப்பட்ட அந்த ஏதோ ஒரு விசயத்துடன் இரண்டறக் கலந்தே., என்றும் நினைவடுக்குகளிலிருந்து நீக்க முடியாத ஓர் இடத்தை அது ஆக்கிரமிக்கும். அதுவே ஆழ்மனதுடன் அரங்கேறிடும்.
இந்த ஆத்மார்த்ததிற்கு மட்டுமே., உடல் மரணிக்கும் தருவாயிலும்,. உள்ளம் அதனை மீட்டிப் பார்த்திடும் ரசனைகளுடன் அமிழ்ந்தெழும் சக்தி உண்டு. அந்த “ரசனைக்குழுக்கள்" பலமாக.. அதாவது ஆழ்ந்து இருக்குமிடத்தில், மரணம் கூட மெய்’ தழுவிட மறுபரிசீலனை செய்திடும்!.
இறந்துபோக கூடிய சூழ்நிலையிலும், சிலர் மீண்டெழுந்த’ செய்திகளும் உண்டல்லவா?!. அதுபோலவே தான்!.
இளமை முதல் முதுமை வரை., பலவித பயணங்களின் பரிணாமங்கள்., பரிமாற்றப் புரிந்துணர்வுகள் என அத்தனைக்கும் அடிப்படையாகத் திகழ்வது மனநலமும்., மனநிலையும் ஆகும்.
மனநிலையின் ஆரோக்கியமான விவாதங்களும், விளக்கங்களுமே மனநலத்தினை தீர்மானிக்கின்றன!.
ஆக., மனித வாழ்வு., முற்றிலும் மனநிலை சார்ந்ததே..
மையப்புள்ளியாய் மனநிலை.,
அடுத்தடுத்த ஒருங்கிணைப்புகள் :
- சூழ்நிலைகள்
- செயல்பாடுகள்
- விடைகள்
- உணர்வுகள்!..
கட்டமைக்கப்பட்ட சூழ்நிலைகளில்.,
நமக்கானவை என்ற’ (அ) நமை ஆதரிக்கும் அந்த ஏதோ?!. ஒன்று இல்லாவிடினும்,. திறம்பட பயணிக்க வேண்டிய கட்டாயங்கள் இருக்கும்.
சில நிறைவுறாத தருணமதில்,. மனதுடன் படரும் அயர்வு., சற்று நம் இதயத்தைத் தட்டிப் பார்க்கும்!.
உருவாக்கப்படும் சூழல்!
இது நமக்கான தளம்! இங்கு நாம்தான் முடிவெடுக்கிறோம். எப்படி? எங்கே? யாரை? எவ்வாறு? அணுகலாம் என்று!.
இதில் வெற்றியடைந்திடும் பட்சத்தில் அடுத்தடுத்த செயற்பாடுகளை நம் மூளை’ அணிவகுத்திடும். வளர்ச்சிக்கான வேகத்தை அது நமக்குள் செலுத்தும்.. இதில் தோல்விகளும் நமை பெரிதளவில் பாதிக்காது..
உருவாக்கும் எண்ணங்கள் இருக்கும் வரை உள்ளத்தின் உத்வேகம் உடனிருக்கும்!.
செயல்பாடுகள் :
இதில் “கூட்டுமுயற்சி"யில் அங்கீகாரத்தின் அடிப்படையில் சில அளவுகோலும் தலைதூக்கும்.
தனித்து செயல்படும் நிலையில்., நமக்கான தனித்தன்மைகள் நமை அடையாளப்படுத்தும்… ஆனால்.,
தனித்து’ எனும் பொழுது உடல்ரீதியான சில வலிகளும்., நம் வழியுடனே தொடர்ந்திருக்கும்!
விடைகள் :
களம் இறங்குகிறோம்., செயல்படுத்துகிறோம்.. அடுத்தென்ன?! கேள்விக்கான விடைகள்..
பல தரப்பட்ட போராட்டங்களுக்கான, பல அனுபவங்களின் கோர்வைகளுடன் பாடங்கள் உணரப்படும்!.
மனதுடன் ஒன்றிய மற்றும் ஒருமித்த கருத்துடைய விடைகள் மற்றும் முரண்பட்ட விடைகள்.. எதுவாக இருந்தாலும்., சுரப்பிகளுக்கான செயல்திறனை பாதிக்காமல் பார்க்க வேண்டியத் தருணம் இது!..
உணர்வுகள் :
விடைகளில் கிடைக்கப்பெற்ற விளக்கங்களுடன்,. இன்னும் விளையாட தேவையான சக்திநிலை’ பெருக.. அலைபாயும் எண்ணங்களையும் கட்டுக்குள் கொண்டுவரும் தியானங்கள் மேற்கொள்ள வேண்டும்!.
தியானம்’ என்பது அமர்ந்து, விழிமூடி., ஓர்புள்ளியில் சிந்தனைகளைக் குவிப்பது மட்டுமல்ல.. இன்னும் நிறைய உண்டு.
சுவாரஸ்யமான சிந்தனைகள் தொடரும்.. அதுதான் வாழ்க்கை!..
விடைபெறாமல்..